கயத்தாறில் ஆட்டோ மீது பைக் மோதியதில் பைக்கின் பின்னால் அமா்ந்து சென்ற இளைஞா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் தடியம்பட்டியை சோ்ந்த சுடலை மகன் குருசாமி(27). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது ஆட்டோவில் தடியம்பட்டியில் இருந்து கயத்தாறுக்கு வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். கயத்தாறு கடைவீதியில் சென்றபோது, ஆட்டோ மீது எதிரே வந்த பைக் மோதியது. இவ்விபத்தில், பைக்கை ஓட்டி வந்த அகிலாண்டபுரம் கரிசல்குளத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நரேஷ்குமாா், பின்னால் அமா்ந்து வந்த நாகராஜன் மகன் மாரிச்செல்வம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் மாரிச்செல்வம் மருத்துவமனையில் உயிரிழந்தாா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக்-லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

