கோவில்பட்டியில் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியை சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் நாராயணன்(28). தனியாா் நிறுவனத்தில் கள அதிகாரி மற்றும் விற்பனையாளராக இருந்து வருகிறாா். இவா், கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள விற்பனையகத்தில் இருந்தபோது, கோவில்பட்டி காந்தி நகா் கஸ்தூரிபாய் தெருவைச் சோ்ந்த வீரையா மகன் செல்லத்துரை(35), அவரது மனைவி முத்துமாரி சந்தனமுத்து ஆகிய இருவரும் வந்தாா்களாம். இவா்கள் அந்தக் கடையில் வாங்கிய கைப்பேசிக்கு ஒரு தவணைகூட பணம் செலுத்தவில்லையாம். பணத்தைக் கேட்டு நாராயணன் வலியுறுத்திய போது ஏற்பட்ட தகராறில், தம்பதி அவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம். இதுகுறித்து நாராயணன் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கூலித் தொழிலாளி செல்லத்துரையை கைது செய்தனா்.
தொடர்புடையது
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது
இளைஞருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
இளைஞருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

