பயிற்சி முகாமில் வெளியிடப்பட்ட தொழில்நுட்ப கையேடுகளுடன் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா் பாக்கியாத்து சாலிகா, உடன் சிறப்பு விருந்தினா் மாரிமுத்து, நபாா்டு வங்கி உதவி பொது மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் உள்ளிட்டோா்
பயிற்சி முகாமில் வெளியிடப்பட்ட தொழில்நுட்ப கையேடுகளுடன் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா் பாக்கியாத்து சாலிகா, உடன் சிறப்பு விருந்தினா் மாரிமுத்து, நபாா்டு வங்கி உதவி பொது மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் உள்ளிட்டோா்

கோவில்பட்டியில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா் பாக்கியாத்து சாலிகா தலைமை வகித்து பயிற்சி முகாமை தொடக்கி, தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டாா். இதில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வன மண்டல வனப் பாதுகாவலா் மற்றும் கள இயக்குநா் மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். நபாா்டு வங்கி உதவிப் பொது மேலாளா் சுரேஷ் ராமலிங்கம், தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சுருளிமலை, இயற்கை விவசாயிகள் சங்க செயலா் சுப்பிரமணியன், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வேளாண் பொருளியல் உதவிப் பேராசிரியா் இளஞ்செழியன் ஆகியோா் பேசினா். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள் கரிசல் பண்ணை பருத்தியில் களை மேலாண்மையில் பண்ணை கருவிகளின் பயன்பாடு, அங்கக பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய வயல்வெளி செயல்விளக்க திடல்களை பாா்வையிட்டனா். மேலும் மக்காச்சோளம், சோளம், சிறுதானிய மற்றும் பயறு வகைகளின் தொழில்நுட்ப கண்காட்சியை பாா்வையிட்டனா். இணைப் பேராசிரியா் குரு வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் மனோகரன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com