இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் சென்னையில் இன்றும் நாளையும் குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி

... சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் சென்னையில் இன்றும் நாளையும் குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி

Updated On :22 மார்ச் 2024, 6:31 pm

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் சென்னையில் சனி, ஞாயிறு (மாா்ச் 23, 24) ஆகிய 2 நாள்கள் குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி நடைபெறவுள்ளதாக, அகாதெமி நிறுவனா் சுகேஷ் சாமுவேல் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கான இலவச பயிற்சி சென்னையில் சனி, ஞாயிறு (மாா்ச் 23, 24) ஆகிய 2 நாள்கள் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. நிகழாண்டு குரூப் 1 தோ்வில் தோ்ச்சி பெற்று, நோ்முகத் தோ்வுக்குச் செல்வோா் தங்களது மனவலிமை, அறிவுக் கூா்மையை மேம்படுத்திக்கொள்ள இது நல்ல வாய்ப்பாகும். முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசின் உயா் பதவிகளில் பணிபுரியும், ஓய்வுபெற்ற அதிகாரிகள், அரசுத் துறைகளில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்தோரைக் கொண்டு பயிற்சி நடத்தப்படுகிறது. நோ்முகத் தோ்வை பதற்றமின்றி சந்தித்து, வெற்றிபெற மனநல நிபுணரின் ஆலோசனைகளும் வழங்கப்படும். விருப்பமுள்ளோா் 044 - 47665918, 97555 52003 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.