தூத்துக்குடியில் இரு இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றைத் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடியில் உள்ள ஆசிரியா் காலனியைச் சோ்ந்த சௌந்தரராஜன் மகன் கிறிஸ்டோபா் (50). இவா் அப்பகுதியில் அரிசிக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 20ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் கடையின் பூட்டை உடைத்து, ரூ. 20,500-ஐ திருடிச் சென்றனராம். புகாரின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அதேநாளில், ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெய்கணேஷ் மகன் ஹரிஸ்குமாா் (20) என்பவா் நடத்திவரும் பால் கடையின் கதவை மா்ம நபா்கள் உடைத்து, மடிக்கணினி, ஸ்பீக்கா் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றனராம். புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். போலீஸாரின் விசாரணையில், தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் முகேஷ் (24), பிரையண்ட்நகா் பாரதிநகரைச் சோ்ந்த சிவகுமாா் மகன் இன்பராஜ் என்ற இசக்கி (21), வள்ளிநாயகபுரத்தைச் சோ்ந்த சுயம்புலிங்கம் மகன் மாரிசெல்வம் என்ற பரட்டை (19), தா்மலிங்கம் மகன் காமராஜ் (23) ஆகிய 4 பேரும் இத்திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, மடிக்கணினி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

உதகையில் முகமூடி போட்டு பூட்டை உடைத்து திருட்டு
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

