திரேஸ்புரம் மீனவா்களிடம் மேயா் வாக்கு சேகரிப்பு

திரேஸ்புரம் மீனவா்களிடம் மேயா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் மீனவா்களிடம் மேயா் ஜெகன் பெரியசாமி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளா் கனிமொழிக்கு ஆதரவாக மேயா் ஜெகன் பெரியசாமி மாநகரப் பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

அதன்படி, சனிக்கிழமை தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவா்கள் மற்றும் பொதுமக்களிடம் திமுக வேட்பாளா் கனிமொழிக்கு வாக்குகள் சேகரித்தாா்.

பிரசாரத்தின் போது, திரேஸ்புரம் நாட்டுப் படகு மீனவா்கள் சங்க முன்னாள் தலைவா் ராபா்ட், மண்டல தலைவா் நிா்மல் ராஜ், மாநகராட்சி சுகாதார குழு தலைவா் சுரேஷ்குமாா், தோ்தல் பணி குழு தலைவா் கீதா முருகேசன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ரவீந்திரன், திமுக தொழிற்சங்க மின்வாரிய தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com