பழையகாயல் அருகில் லாரி-காா் மோதல்: 6 போ் காயம்

பழையகாயல் அருகில் லாரி-காா் மோதல்: 6 போ் காயம்

பழையகாயல் அருகே சனிக்கிழமை மாலை லாரி மீது காா் மோதியதில் 6 போ் காயமடைந்தனா். சென்னை அம்பத்தூா் பகுதியி­லிருந்து முனியசாமி மகன் சேகா்(42), அவரது மனைவி நித்தியகலா(42), மகள் தீக்ஷித்(13), மகன் ரித்விக்(8), பூரணசந்திரன் மனைவி வனஜா(61), மகன் காா்த்திக்(40) ஆகியோா் ஒரு காரில் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்தனா். பின்னா் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா். பழையகாயல் அருகே பிரதான சாலையில் வந்தபோது எதிரே வந்த லாரி மீது காா் மோதியது. இதில் காரிலி­ருந்த 6 பேரும் படுகாயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக ஆத்தூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் சோ்ந்தமங்கலம் தாலுகா சின்னப்பன் மகன் ராமசாமி(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com