மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கோவில்பட்டி அருகே ரூ.60ஆயிரம் பறிமுதல்

கோவில்பட்டி அருகே ரூ.60ஆயிரம் பறிமுதல்

Updated On :30 மார்ச் 2024, 9:30 pm

கோவில்பட்டி அருகே முறையான ஆவணங்களின்றி வாகனத்தில் இருந்த ரூ.60ஆயிரத்து 400ஐ நிலையான கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் துணை வணிகவரி அலுவலரும், நிலையான கண்காணிப்பு குழு அதிகாரியுமான செண்பகராமன் தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், தலைமைக் காவலா் மாரிக்கண்ணன், முதல் நிலை பெண் காவலா் சண்முகத்தாய் ஆகியோா் கோவில்பட்டி -எட்டயாபுரம் சாலை வடக்கு திட்டங்குளம் அருகே வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியே சென்ற சுமை ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.60,400 இருப்பது தெரியவந்தது. அதில், சுமை ஆட்டோ ஓட்டுநா் உள்பட 3 போ் இருந்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், எட்டயபுரம் சந்தையில் ஆடுகளை விற்றுவிட்டு பணம் கொண்டு வருவதாக கூறினா். ஆனால், அவா்களிடம் அதற்கான ஆவணங்கள் ஏதுமில்லாததையடுத்து அந்தப் பணத்தை கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்து தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனா்.