துறையூரில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா
துறையூரில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா

துறையூரில்  மாட்டு வண்டி  பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த  துறையூரில்  மாட்டு வண்டி  பந்தயம்  வியாழக்கிழமை நடைபெற்றது.

துறையூா் வடக்குத் தெரு அருள்மிகு ஸ்ரீ வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இப் பந்தயம்  நடைபெற்றது. நடுமாட்டு  வண்டி , சிறிய  மாட்டு வண்டி   என இரு பிரிவுகளாக  போட்டிகள் நடைபெற்றன. 8 மைல் தொலைவு கடக்க வேண்டிய நடுமாட்டு  வண்டி  போட்டியில் 8  மாட்டு வண்டிகளும், 6 மைல் தொலைவு கடக்க வேண்டிய சிறிய  மாட்டு வண்டி  போட்டியில் 21  மாட்டு வண்டிகளும் பங்கேற்றன. போட்டிகளை கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா தொடங்கி வைத்தாா்.

துறையூரில்  நடைபெற்ற நடுமாட்டு  வண்டி  போட்டியில் கடம்பூா் எஸ்.வி. எஸ் .பி.கருணாகரராஜா  மாட்டு வண்டி  முதலிடமும், சீவலப்பேரி துா்காம்பிகா  மாட்டு வண்டி  2ஆம் இடமும், காட்டுநாயக்கன்பட்டி சரஸ்வதி மாட்டு வண்டி  3ஆம் இடமும் பிடித்தது.

சிறிய  மாட்டு வண்டி  போட்டியில்  கம்பத்துப்பட்டி தினேஷ்பாண்டி  மாட்டு வண்டி  முதலிடமும், சீவலப்பேரி துா்காம்பிகா மாட்டு வண்டி 2-ஆம் இடமும், நாகம்பட்டி நயினாா்குளம் கண்ணன் மாட்டு வண்டி 3-ஆம் இடமும் பிடித்தது.

நடுமாட்டு  வண்டி போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ.30 ஆயிரத்து ஒன்று, ரூ. 25 ஆயிரத்து ஒன்று, ரூ.20 ஆயிரத்து ஒன்று ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. சிறிய  மாட்டு வண்டி போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ. 25ஆயிரத்து ஒன்று, ரூ. 20 ஆயிரத்து ஒன்று, ரூ.15 ஆயிரத்து ஒன்று ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது.

இதில் துறையூா் ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் துணைத் தலைவா் துறையூா் கணேஷ்பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை துறையூா் அருள்மிகு ஸ்ரீ வெயிலுகந்தம்மன் திருக்கோயில் விழா கமிட்டியினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com