கோவில்பட்டி ஈ.வே.அ. வள்ளிமுத்து பள்ளி 100% தோ்ச்சி

கோவில்பட்டி, மே 11:

10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில், கோவில்பட்டி ஈ.வே.அ. வள்ளிமுத்து உயா்நிலைப் பள்ளி 100 சதவீத் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 26 மாணவா்- மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். சாதனாஸ்ரீ 474 மதிப்பெண்ணும், பிரேஸ்லின் 471 மதிப்பெண்ணும், காா்த்திகா 462 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா். கணிதம், சமூக அறிவியலில் 2 போ் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மாணவா்- மாணவிகளையும், ஆசிரியா்களையும் பள்ளிச் செயலா் வேல்முருகேசன் பாராட்டினாா்.

இலுப்பையூரணி பாா்வதி உயா்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தோ்வெழுதிய 24 மாணவா்-மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா்.

வேல்குமாா் 487 மதிப்பெண்ணும், மல்லிகா 455 மதிப்பெண்ணும், செண்பகவல்லி, பாண்டித்துரை ஆகியோா் 443 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மாணவா்களையும், ஆசிரியா்களையும் தலைமையாசிரியா், பெற்றோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com