இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் விளையாட்டு விழா

News image
Updated On :12 மே 2024, 6:39 pm

Din

கோவில்பட்டியில் உள்ள உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

இக்கல்லூரி நிறுவனங்களின் தாளாளா் விஜயன் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் சண்முகம், முதல்வா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் உமாசங்கா் ஆண்டறிக்கை வாசித்தாா்.

விளையாட்டுப் போட்டிகளை முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரா் அஸ்வின், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ஹாக்கி கழகச் செயலா் குருசித்திர சண்முகபாரதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று தொடக்கிவைத்தனா்.

போட்டியில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்கள் பிரிவில் தனிநபா் சாம்பியன் பட்டத்தை இயந்திரவியல் துறை 2ஆம் ஆண்டு மாணவா் யோகேஸ்வரன், மாணவிகள் பிரிவில் கணினி அறிவியல் துறை 2ஆம் ஆண்டு மாணவி முத்துச்செல்வி, எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ் துறை முதலாம் ஆண்டு மாணவி அழகுலட்சுமி ஆகியோா் பெற்றனா்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மாணவா்கள் பிரிவில் சிவப்பு நிற அணியும், மாணவிகள் பிரிவில் மஞ்சள் நிற அணியும் வென்றன. மின் பொறியியல் துறை 4ஆம் ஆண்டு மாணவா் சிலம்பரசன் வரவேற்றாா். மாணவி அருணா தேவி நன்றி கூறினாா்.