சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

2-ஆவது நாளாக கடலுக்குச் செல்லாத தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள்

சூறாவளிக் காற்று எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

News image

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.

Updated On :27 நவம்பர் 2024, 9:15 pm

Din

சூறாவளிக் காற்று எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, மன்னாா் வளைகுடா கடல், தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது. அதனால், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் இம்மாவட்டத்தில் வேம்பாா் முதல் பெரியதாழை வரை சுமாா் 2,500 நாட்டுப் படகு, பைபா் படகுகள், 577 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

ஆழ்கடலில் பல்வேறு பகுதிகளில் தங்கி தொழில் செய்யும் மீனவா்கள் பாதுகாப்பாக இருக்கவும், அருகேயுள்ள கடற்கரைப் பகுதிக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2ஆவது நாளாகவும் கடலுக்குச் செல்லாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, மீனவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.