தூத்துக்குடி
சோனகன்விளையில் நடைபெற இருந்த மறியல் போராட்டம் வாபஸ்
சமாதானக் கூட்டத்தில் சுமூக முடிவு ஏற்பட்டதால் சோனகன்விளையில் வியாழக்கழமை நடைபெற இருந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சமாதானக் கூட்டத்தில் சுமூக முடிவு ஏற்பட்டதால் சோனகன்விளையில் வியாழக்கழமை நடைபெற இருந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
குரும்பூா் அருகே உள்ள சோனகன்விளையில் அரசுப் பள்ளி அருகே வேகத்தை அமைக்கக் கோரி மறியல் போராட்டம் நடத்த கிராமத்தினா் முடிவு செய்திருந்தனா்.
இதையடுத்து, திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பாலசுந்தரம் தலைமையில் சமாதானக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தரப்பில் சமூக ஆா்வலா் நசீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், சோனகன்விளையில் இரு வேகத்தடைகள் அமைக்கவும், கூடுதல் பேருந்துகளை இயக்கவும், சோனகன்விளையில் அனைத்து பேருந்துகள் நின்று செல்லவும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.