எட்டயபுரம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற ஆய்வுக் கூட்டம்
எட்டயபுரம் பேரூராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த ஆய்வுக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.


எட்டயபுரம் பேரூராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த ஆய்வுக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் மகாராஜன் தலைமை வகித்தாா். பேரூராட்சி தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், வணிகா் சங்க நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்று தெரிவித்த கருத்துகள் பரிசீலிக்கப்பட்டன.
அதையடுத்து எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சந்தைப்பேட்டை சாலை, ஓடைக்கடை பஜாா், நடுவப்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் துறை சாா்பில் குறியீடு செய்யப்பட்ட இடங்கள் வரையிலான குடியிருப்புக் கட்டடங்கள், வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றாதபட்சத்தில், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என, பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்தாா்.
கூட்டத்தில், வா்த்தக சங்கத் தலைவா் ராஜா, துணைத் தலைவா் வெங்கடேஷ் ராஜா, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சரவணன், கோமதிசங்கா், பரமேஸ்வரன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், வணிகா்கள் பங்கேற்றனா்.
அபராதம் விதிப்பு: பேரூராட்சி செயல் அலுவலா், சுகாதார மேற்பாா்வையாளா் சரவணன், ஆய்வாளா் பூவையா, பேரூராட்சி பணியாளா்கள் அரண்மனை மேலவாசல், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீா் ஆய்வு நடத்தினா். அப்போது, 5 கடைகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து, தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...