தூத்துக்குடி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக, தூத்துக்குடி மாநகரம் உள்பட மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
இதுகுறித்து கப்பல்களுக்கும், மீனவா்களுக்கும் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.