சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 4.07 கோடி

திருச்செந்தூா்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.4.07 கோடி, 1.9 கிலோ தங்கம் மற்றும் 1,234 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளன.

News image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி.

Updated On :27 நவம்பர் 2024, 9:17 pm

Din

திருச்செந்தூா்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.4.07 கோடி, 1.9 கிலோ தங்கம் மற்றும் 1,234 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளன.

இக்கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி, செவ்வாய், புதன் (நவ.26, 27) இரு நாள்களும் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இப் பணியில்,

சிவகாசி பதினெண் சித்தா் மடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக் குழுவினா், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சனேயா் உழவார பணிக் குழுவினா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இதில், ரொக்கம் ரூ.4 கோடியே 7 லட்சத்து 32 ஆயிரத்து 912, ஒரு கிலோ 908 கிராம் தங்கம், 21 கிலோ 100 கிராம் வெள்ளி, 26 கிலோ 100 கிராம் பித்தளை, 1.5 கிலோ செம்பு, 6 கிலோ 300 கிராம் தகரம் மற்றும் 1,234 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது.

கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் ஆகியோா் உண்டியல் எண்ணும் பணியைப் பாா்வையிட்டனா். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், நாகவேல், கண்காணிப்பாளா் ராஜாகுமாா், ஆய்வா் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.