விளாத்திகுளம் தொகுதியில் ரூ.1.38 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் திறப்பு

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் ரூ. 1கோடியே 38 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் ரூ. 1கோடியே 38 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அருங்குளம் ஊராட்சியில் 15ஆ வது நிதிக் குழு மற்றும் உபரி நிதியின் கீழ் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி செயலகக் கட்டடம், வேலிடுபட்டியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பயணியா் நிழற்குடை, மேல்மாந்தையில் ரூ.13 லட்சத்தில் ரேஷன் கடை கட்டடம், கே. தங்கம்மாள்புரத்தில் ரூ.23 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டடம், எப்போதும்வென்றான் ஊராட்சியில் மூலதன மானிய நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ. 23 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட ரூ.1.38 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், சீனிவாசன், சசிகுமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பு ராஜன், ராமசுப்பு, காசிவிசுவநாதன், ராதாகிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் முத்துக்குமாா், வீரபெருமாள், வாசுகி பவானி, வேல்கனி, ராஜேஸ்வரி, புஷ்பவள்ளி, மல்லிகா முத்தையாசாமி, ஆரோக்கியராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.