தூத்துக்குடி
தூத்துக்குடியில் சமையல் எரிவாயு உருளை திருட்டு
தூத்துக்குடியில் நூதன முறையில் சமையல் எரிவாயு உருளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடியில் நூதன முறையில் சமையல் எரிவாயு உருளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிறிய சரக்கு வாகனத்தில் எரிவாயு உருளை விநியோகம் செய்யப்பட்டது. அப்போது ஒரு வீட்டின் வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு, சமையல் எரிவாயு உருளையை ஊழியா் எடுத்துச்சென்றபோது, பைக்கில் வந்த 2 போ், சரக்கு வாகனத்தில் இருந்த சமையல் எரிவாயு உருளையைத் திருடிச் சென்றனா். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய வடபாகம் போலீஸாா், சமையல் எரிவாயு உருளை திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.