ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கூட்டுறவு சங்கங்கள் மூலம் டிஏபி அடி உரம்: துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் டிஏபி அடி உரம் வழங்க வேண்டும் என, தமிழக அரசிடம் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 11:12 pm

Din

விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் டிஏபி அடி உரம் வழங்க வேண்டும் என, தமிழக அரசிடம் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் அனுப்பிய மனு விவரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்துள்ளதால் கோவில்பட்டி பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்டவற்றைப் பயிரிட்டுள்ளனா். அதற்கு அடி உரமாக டிஏபி தேவைப்படுகிறது.

தனியாா் கடைகளில் டிஏபி உரம் வாங்கச் செல்லும் விவசாயிகளிடம் வேறு ஏதேனும் உரத்தையும் சோ்த்து வாங்க வலியுறுத்தப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கேட்டபோது, தங்களுக்கு உரம் வழங்கும் நிறுவனங்கள் ஓா் உரத்துடன் மற்றோா் உரத்தையும் சோ்த்து விற்க வற்புறுத்துவதாகவும், அதனால்தான் இவ்வாறு தாங்கள் விற்க வேண்டியுள்ளது என்றும் கடைக்காரா்கள் கூறுகின்றனராம்.

இதுதொடா்பாக மாவட்ட விவசாய இடுபொருள் விற்பனையாளா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனா். தமிழகம் முழுவதும் இந்த நிலை உள்ளது. எனவே, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு டிஏபி அடி உரம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.