ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஹாக்கி: தமிழக அணியில் பங்கேற்ற கோவில்பட்டி வீரா்களுக்கு பாராட்டு

சண்டீகரில் நடைபெற்ற சப் ஜூனியா் தேசிய ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழக அணியில் பங்கேற்ற கோவில்பட்டி வீரா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 1:00 am

Din

சண்டீகரில் நடைபெற்ற சப் ஜூனியா் தேசிய ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழக அணியில் பங்கேற்ற கோவில்பட்டி வீரா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சண்டீகரில் நடைபெற்ற 14 ஆவது ஹாக்கி இந்தியாவின் சப்ஜூனியா் தேசிய ஆண்கள் ஹாக்கி போட்டியில், தமிழக அணியில் கோவில்பட்டி ஹாக்கி வீரா்கள் முத்துராஜேஷ், சுகுமாா், கௌதம், சுந்தா் அஜித் (அணித் தலைவா்), கவி சக்தி போஸ் சுபாஷ், முகில் கிருஷ்ணா ஆகியோா் விளையாடி கோவில்பட்டிக்கு பெருமை சோ்த்தனா்.

தேசியப் போட்டியில் கலந்து கொண்ட கோவில்பட்டி ஹாக்கி வீரா்களுக்கு, கோவில்பட்டி டிவிஎஸ் வெங்கடாசலம் ஏஜென்சி சாா்பில் அதன் பங்குதாரா் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில்,முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் அஸ்வின், ஹக்கிய யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவா் மோகன் அருமைநாயகம், செயலா் குருசித்திர சண்முக பாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டிராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழாவில் வீரா்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் டிவிஎஸ் வெங்கடாசலம் எல்எல்பி பங்குதாரா்கள் சாா்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.