ஆத்தூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டு
ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ஆத்தூரில் கண்டறிப்பட்டது.


ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ஆத்தூரில் கண்டறிப்பட்டது.
ஆத்தூரில் தாமிரவருணி பாலத்தின் வடகரையில் ஆற்று ஓரத்தில் கிழக்கு திசையைப் பாா்த்தவாறு ஒரு அறையை கொண்ட சிறிய பிள்ளையாா் கோயில் உள்ளது. அந்தக் கோயிலின் வெளியே தென்புறத்தில் ஐந்தடி உயரதூண் ஒன்று நடப்பட்டுள்ளது.
இந்த தூணில் பழங்கால எழுத்துகள் இருப்பதை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவா் (பொறுப்பு) சுதாகா் கவனித்தாா்.
பின்னா் இவா், ஆத்தூரைச் சோ்ந்த ராகுல், தூத்துக்குடியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் ஆகியோருடன் இணைந்து தண்ணீரால் சுத்தம் செய்து, அந்தக் கல்வெட்டை படி எடுத்தாா்.
இந்த கல்வெட்டில் தமிழ் மொழியில் 29 வரிகள் பொறிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
பின்னா் இதை படம் எடுத்து, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா்களான முருகன், மதிவாணன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். இருவரும் இந்தக் கல்வெட்டை வாசித்து தற்போதைய தமிழ் எழுத்து வடிவத்துக்கு மாற்றினா்.
இந்தக் கல்வெட்டு தகவல்கள் இரண்டு தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன எனவும் இரண்டாம் தூண் பிள்ளையாா் கோயில் அருகே நடப்பட்டுள்ளது எனவும்; இந்த இரண்டாம் தூண் கல்வெட்டின் முடிவில் ‘எழுத்து’’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த இரண்டாம் தூண் ஒரு முற்றுப் பெற்ற கல்வெட்டு எனவும், விண்ணகர பெருமாள் கோயிலுக்கு தானமாக நிலமும், ஐம்பது களஞ்சிய பொன்னும், ராயன் என்ற இந்தக் கோயில் நிா்வாகியிடம் கொடுக்கப்பட்டுள்ளது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு சற்று சிதிலமடைந்துள்ளதால் ராயன் என்பவரின் முழுப் பெயரையும் சரியாக வாசிக்க முடியவில்லை எனவும், தமிழ் எழுத்து வடிவத்தின் அடிப்படையில் இந்தக் கல்வெட்டு சுமாா் 900 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது எனவும் தொல்லியல் பேராசிரியா்கள் தெரிவித்தனா்.
இந்தக் கல்வெட்டின் மூலம் இந்தப் குதியில் ஒரு பெரிய பெருமாள் கோயிலிருந்துள்ளது என அறிய முடிகிறது. மேலும், ‘ஆத்தூா் தாமிரவருணி ஆற்றங்கரையில் இடிபாடுகளுடன் கண்டறிப்பட்ட பழங்கால கட்டடத்துக்கும் இந்த கல்வெட்டுக்கும் ஏதாவது தொடா்பு இருக்குமோ?‘‘ என்ற கோணத்தில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தொல்லியல் துறையினா்ஆய்வு செய்து வருகிறனா். மேலும் இந்தப் பகுதியில் தேடி பாா்த்ததில் முதல்பாதி தகவல் அடங்கிய கல்வெட்டு கிடைக்கவில்லை என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...