கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டம்
கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில் ஆழ்துளைக் கிணற்றின் அடிகுழாயை சரிசெய்து தர வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.


கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில் ஆழ்துளைக் கிணற்றின் அடிகுழாயை சரிசெய்து தர வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
வட்டச் செயலா் ஜி. பாபு தலைமை வகித்தாா். உதவி செயலா் ஜி. ராமகிருஷ்ணன், வட்டக் குழு உறுப்பினா் ஆா். ரெங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஜி. சேதுராமலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் அ. ரஞ்சனி கண்ணம்மா, எஸ். செல்லையா, இளைஞா் பெருமன்ற நகரச் செயலா் கே. செந்தில் ஆறுமுகம், திரளான பொதுமக்கள் அடிகுழாயுடன் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் அறை வாசலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் அவா்கள் மனு அளித்தனா். மனு விவரம்:
ஊத்துப்பட்டி ஊராட்சிக்கு தெற்கு குமாரபுரத்தில் பழுதாகி காட்சிப்பொருளாகியுள்ள ஆழ்துளைக் கிணறு அடிகுழாயை சீரமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அந்தக் குழாயை உடனடியாக சரிசெய்து தர வேண்டும்.
பாண்டவா்மங்கலம் ஊராட்சி காமராஜ் நகா் மேற்குப் பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அப்பகுதியில் வாருகால் வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் தண்ணீா் அங்கேயே தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் பேவா் பிளாக் சாலை, கழிவுநீா் வாருகால் அமைக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...