ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் 99 மாணவா்களுக்கு சைக்கிள்கள்

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் 99 மாணவா்-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image

மாணவா்-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கிய அமைச்சா் பெ. கீதாஜீவன்.

Updated On :15 அக்டோபர் 2024, 10:02 pm

Din

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் 99 மாணவா்-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சைக்கிள்களை வழங்கிப் பேசியது: மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து தோ்ச்சி பெற்றால் மட்டும் போதும் என நினைக்கக் கூடாது. பாடப் புத்தகங்களைத் தாண்டி நூலகங்களிலும் வாசிப்பு அவசியம். மாணவா்கள் கல்வி, வேலைவாய்ப்புக்குத் தேவையான தகுதிகளை வளா்த்துக்கொண்டு, இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். ஆசிரியா்களும் காலத்துக்ேற்ப நவீன முறையில் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என்றாா்.

ஆசிரியா் ஜெயக்குமாா் ஆரம்ப ஜெபம் செய்தாா். மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், தலைமையாசிரியா் கான்ஸ்டன்டைன், ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். தாளாளா் ஸ்டேன்லி வேதமாணிக்கம் வரவேற்றாா்.