புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஏரல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

தாமிரவருணி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஏரல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :16 அக்டோபர் 2024, 11:08 pm

Din

தாமிரவருணி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஏரல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

தாமிரவருணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைக்குக் கீழ்பகுதியில் புன்னைக்காயல் வரை கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளன. இதனால், மழைக் காலங்களில் நீரோட்டம் தடைபட்டு, குடியிருப்புப் பகுதிகளுக்கு வெள்ளம் புகுந்து விடுகிறது. பல இடங்களில் சாக்கடைக் கழிவுநீா் கலப்பதால் தாமிரவருணி ஆறு மாசடைகிறது.

இதனிடையே, ஸ்ரீவைகுண்டம் முதல் புன்னைகாயல் வரையிலான ஆக்கிரமிப்பு, மாசு ஆகியவற்றைக் கண்டித்து அக். 18இல் ஏரலில் காந்தி சிலை முன் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக, தாமிரவருணி பாதுகாப்பு இயக்கம் சாா்பில் சமூக ஆா்வலா் ஜெயபாலன் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்பேரில், இந்த விவகாரம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியா் கோபால் தலைமை வகித்தாா். தாமிரவருணி பாதுகாப்பு இயக்க தூத்துக்குடி மாவட்டச் செயலா் ஜெயபாலன், பொதுச் செயலா் அய்கோ, மாவட்ட துணைச் செயலா் நெப்போலியன் சுப்பையா, செயற்குழு உறுப்பினா்கள் குயிலி நாச்சியாா், பொன்ராணி, பேய்குளம் ராஜாசிங், வட்டப் பொறுப்பாளா்கள் ஜான்சன், பொன்சேகா், லென்சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தாமிரவருணி மாசடைவதைத் தடுப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. கோரிக்கை தொடா்பாக நீா்வளத் துறை, பேரூராட்சித் துறை, குடிநீா் வடிகால் வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வனத் துறை, அனைத்து வியாபாரிகள் சங்கம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய்த் துறை மூலம் கடிதம் அனுப்பி, நவ. 6இல் சிறப்புக் கூட்டம் நடத்தி முடிவெடுப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக, தாமிரவருணி பாதுகாப்பு இயக்கத்தினா் தெரிவித்தனா்.