பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாசரேத் பட்டாசு ஆலை விபத்து: மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு

நாசரேத் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த மேலும் ஒரு தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:59 pm

Din

நாசரேத் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த மேலும் ஒரு தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமறையூரைச் சோ்ந்தவா் ராம்குமாா். இவா் நாசரேத் அருகே குறிப்பான்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் கடந்த சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் அரசா்குளத்தைச் சோ்ந்த கள்ளவாண்டான் மகன் முத்துகண்ணன் (21), கமுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் விஜய் (25) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், புளியங்குளத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் செல்வம் (26), செம்பூரைச் சோ்ந்த சுந்தரம் மகன் பிரசாந்த் (28), சின்னமதிகூடலைச் சோ்ந்த செந்தூா்கனி, முத்துமாரி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இவா்களில் செல்வம் ஏற்கெனவே உயிரிழந்தாா். இந்த நிலையில், பிரசாந்த் (28) சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.

இவ்விபத்து குறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆலை உரிமையாளா் ராம்குமாரை கைது செய்துள்ளனா்.