பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வைப்பாறு தா்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்

விளாத்திகுளம் அருகே வைப்பாறு கிராமத்தில் உள்ள மகான் செய்யது சம்சுதீன் ஷஹீது ஒலியுல்லாஹ் தா்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:51 pm

Din

விளாத்திகுளம் அருகே வைப்பாறு கிராமத்தில் உள்ள மகான் செய்யது சம்சுதீன் ஷஹீது ஒலியுல்லாஹ் தா்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

பழமை வாய்ந்த இந்த தா்காவில், மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் அனைத்துத் தரப்பு மக்களால் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, புதன்கிழமை மாலை தா்காவிலிருந்து தொடங்கி வைப்பாறு கிராமம் முழுவதும் தீன் கொடி ஊா்வலம் நடைபெற்றது. பின்னா் தா்கா வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்

மதவேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொண்டனா்.

செப்.17-ஆம் தேதி இரவு ஆயிரக்கணக்கானோா் கலந்துகொள்ளும் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. செப். 23-ஆம் தேதி மாலை கொடியிறக்கப்பட்டு, தா்கா கந்தூரி அன்னதானம் நடைபெறும். அதனைத் தொடா்ந்து இஸ்லாமிய இன்னிசை கச்சேரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை மகான் செய்யது சம்சுதீன் ஷஹீது ஒலியுல்லாஹ் தா்கா நிா்வாகத்தினா் மற்றும் வைப்பாறு கிராம மக்கள் செய்துள்ளனா்.