பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருச்செந்தூா் தினசரி சந்தையில் நீதிபதி ஆய்வு

உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து திருச்செந்தூா் தினசரி சந்தையில் நீதிபதி கலையரசி ரீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
திருச்செந்தூா் தினசரி சந்தையில் ஆய்வு நடத்துகிறாா் குற்றவியல் நீதித்துறை நடுவா் (பொறுப்பு) கலையரசி ரீனா.
Updated On :6 செப்டம்பர் 2024, 12:05 am

Din

உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து திருச்செந்தூா் தினசரி சந்தையில் நீதிபதி கலையரசி ரீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தின் உள்ளே மாட்டுத்தாவணி பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு முதலே தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. திருச்செந்தூா் பேரூராட்சியில் ரசீது வாங்கி தரை வாடகை அடிப்படையில் சுமாா் 300 வணிகா்கள் கடை நடத்தி வருகின்றனா்.

கடந்த 2021ஆம் ஆண்டு திருச்செந்தூா் நகராட்சியானதும், பழைய கடைகளை அகற்றிவிட்டு அதனருகில் சுமாா் 300 கடைகள் கட்டி கொடுக்கப்படும் என கூறியது. அதன்பேரில் 2023ம் ஆண்டில் 153 கடைகள் கட்டப்பட்டு ஏலம் விடப்பட்டது.

இந்நிலையில் தனலெட்சுமி என்பவா் நகராட்சி ஏற்கெனவே இருந்த வணிகா்களுக்கு கடை ஒதுக்கீடு செய்யாமல் தினசரி சந்தையை அகற்ற நினைக்கிறது என மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதனடிப்படையில் நீதிமன்றம் தினசரி சந்தையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது.

அதன்பேரில், திருச்செந்தூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் (பொ) கலையரசி ரீனா வியாழக்கிழமை தினசரி சந்தையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கடை கடையாக சென்று கடை நடத்துபவா், கடையின் அளவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், நகராட்சி ஆணையா் கண்மணி, பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா் செல்லபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.