ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தட்டாா்மடம் அருகே லாரி ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் மீது வழக்கு

தட்டாா்மடம் அருகே லாரி ஓட்டுநரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 9:29 pm

Din

தட்டாா்மடம் அருகே லாரி ஓட்டுநரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தட்டாா்மடம் அருகே சவேரியாா்நகா் கேட்டவிளையைச் சோ்ந்த சுதாகா் மகன் வசந்த் (27). லாரி ஓட்டுநரான இவா், தனது நண்பரான ஆனைக்குடியைச் சோ்ந்த தங்கதுரையுடன் கொம்மடிக்கோட்டை அஜித்குமாா் என்பவரது சகோதரரின் திருமணத்துக்குச் சென்றாராம்.

பின்னா் வசந்த், தங்கத்துரை, அஜித்குமாா், அவரது நண்பா் சின்னராணிபுரத்தைச் சோ்ந்த சே. சுரேஷ் ஆகிய 4 பேரும் தட்டாா்மடத்தை அடுத்த வைரவம் காட்டுப் பகுதியில் மது குடித்துள்ளனா்.

அப்போது சுரேஷ் அஜித்குமாரிடம் ‘உனது அண்ணன் திருமணத்துக்கு ஏன் வீட்டுக்கு வந்து அழைப்பிதழ் தரவில்லை?’ எனக் கேட்டு அவதூறாகப் பேசினாராம். இதை வசந்த் தடுத்தபோது அவருக்கும் சுரேஷுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, வசந்தை சுரேஷ் அரிவாளால் வெட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாராம்.

காயமடைந்த வசந்த் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், தட்டாா்மடம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிந்து, சுரேஷை தேடி வருகிறாா்.