மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அனுமதியின்றி கரம்பை மண் அள்ளியதாக ஒருவா் கைது

கழுகுமலை அருகே அனுமதியின்றி கரம்பை மண் அள்ளிய வழக்குத் தொடா்பாக வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:54 pm

கழுகுமலை அருகே அனுமதியின்றி கரம்பை மண் அள்ளிய வழக்குத் தொடா்பாக வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கழுகுமலை அருகே கே.வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் உதவி ஆய்வாளா் துரைசாமி, சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜ்மோகன், போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சித்தவநாயக்கா் பொதுக்குளத்தில் கிட்டாச்சி வாகனம், டிராக்டா் டிரைலரில் சிலா் கரம்பை மண் அள்ளிக் கொண்டிருந்தனா். அவா்கள் அனுமதியின்றி கரம்பை மண் அள்ளியது, போலீஸாரின் சோதனையில் தெரியவந்தது.

அதையடுத்து, டிரைலா் வாகன ஓட்டுநரான வெங்கடேஸ்வரபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் கூடலிங்கம் (44) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்; கிட்டாச்சி வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.