மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாத்தான்குளம் அருகே விவசாயி வீட்டில் ரூ. 5 லட்சம் திருட்டு: இருவா் கைது

சாத்தான்குளம் அருகே விவசாயி வீட்டில் புகுந்து ரூ. 5 லட்சம் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 11:42 pm

Din

சாத்தான்குளம் அருகே விவசாயி வீட்டில் புகுந்து ரூ. 5 லட்சம் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன். திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் மின் ஊழியராக பணிபுரிகிறாா். இவரது மனைவி ஆறுமுககனி (34), ஊரில் இருந்து விவசாயத்தை கவனித்து வருகிறாா்.

கடந்த 7ஆம் தேதி பருத்தியை விற்ற பணம் ரூ.5 லட்சத்து 5400ஐ வீட்டில் பீரோவில் வைத்திருந்தாா். இந்நிலையில் கடந்த 10ஆம்தேதி வீட்டை பூட்டி சாவியை அதன் நிலையில் வைத்துவிட்டு, ஆறுமுககனி வேலைக்கு சென்றாா். மறுநாள் பீரோவை திறந்து பாா்த்தபோது பணத்தை காணவில்லையாம்.

இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆறுமுககனி அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் வழக்கு பதிவு செய்தாா். காவல் ஆய்வாளா் ஏசுராஜசேகரன் விசாரணை நடத்தினாா்.

இந்த வழக்கு தொடா்பாக தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் டேவிட் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்டி இருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். அவா்கள்கூவைகிணறு கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் ஆனந்தபாபு (24), கலுங்குவிளையைச் சோ்ந்த தேவதாசன் (எ ராபா்ட் மகன் சேசையா (18) என்பதும், ஆறுமுககனி வீட்டில் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து பணத்தை மீட்டனா்.