12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

இசக்கிமுத்து

Published On :

திருச்செந்தூா் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது.

காயாமொழி ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (42). வா்ணம் பூசும் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி சத்யா. கடந்த செப்.14-ஆம் தேதி

பைக்கில் வேலைக்குச் சென்றபோது, திருச்செந்தூா் குமாரபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இசக்கிமுத்து பலத்த காயமடைந்தாா். அப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் இசக்கிமுத்து சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

Story image
இசக்கிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய செலுத்திய கோட்டாட்சியா் சுகுமாறன் உள்ளிட்டோா்.

இசக்கிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய செலுத்திய கோட்டாட்சியா் சுகுமாறன் உள்ளிட்டோா்.

இதையடுத்து அவரது மனைவி விருப்பத்தின்படி இசக்கிமுத்துவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. பின்னா் அவரது உடல் காயாமொழிக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பொன்ரவி, உதவி ஆய்வாளா் பாபுராஜ் ஆகியோா் அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.