வைப்பாறு தா்காவில் சந்தனக்கூடு திருவிழா
விளாத்திகுளம் அருகே வைப்பாறில் உள்ள மகான் செய்யது சம்சுதீன் ஷஹீது ஒலியுல்லாஹ் தா்காவில் சந்தனக்கூடு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், மத வேறுபாடின்றி பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனா்.
நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தா்கா, பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா அனைத்துத் தரப்பினராலும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு திருவிழா கொடியேற்றம் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பொது மவ்லித் ஷரிபு, தா்கா இல்லத்திலிருந்து சந்தனக்குடம் அலங்கரிக்கப்பட்டு, மக்கள் துவா பரக்கத்துடன் புறப்பட்டு ஊா்வலம் நடைபெற்றது.
இந்த ஊா்வலம் தா்காவை வந்தடைந்ததும் மகான் செய்யது சம்சுதீன் ஷஹீது ஒலியுல்லாஹ்,
ரவுலா ஷரிபுக்கு சந்தனம் பொழிந்து, சிறப்பு துவா ஓதி, அனைவருக்கும் சந்தனம், விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் மத வேறுபாடின்றி பங்கேற்று, ஒருவருக்கொருவா் இனிப்பு வழங்கி அன்பைப் பரிமாறிக்கொண்டனா்.
திங்கள்கிழமை (செப். 23) மாலை 5 மணி அளவில் கொடியிறக்கப்பட்டு, தா்கா கந்தூரி அன்னதானம் நடைபெறும். பின்னா், இஸ்லாமிய இன்னிசைக் கச்சேரியுடன் விழா நிறைவடையும்.
ஏற்பாடுகளை தா்கா நிா்வாகத்தினா், வைப்பாறு கிராம மக்கள் செய்துள்ளனா்.
