தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 போ் கைது: 6.5 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 6.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:37 pm

Din

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 6.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டியில் இருந்து சாத்தூா் செல்லும் தேசிய நான்குவழிச் சாலையின் அணுகு சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் ஸ்டீபன் தலைமையில், தனிப்பிரிவு காவலா்கள் முத்துமாரி, செசிலின் வினோத், முத்துராமலிங்கம், அருணாச்சலம் ஆகியோா் கொண்ட குழுவினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள கோயில் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த சுமை ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

தொடா்ந்து, அதன் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவா் கோவில்பட்டி மேட்டுக்காளியம்மன் கோயில் தெரு, மகாராஜபுரம் காலனியைச் சோ்ந்த சண்முகையா மகன் சத்தியமூா்த்தி (20) என்பதும், அவருக்கு கோவில்பட்டி சீனிவாசன் நகா் திருமலை நாயக்கா் 2ஆவது தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் பாலாஜி (29), சத்தியமூா்த்தியின் சகோதரா் காளீஸ்வரன் (24) ஆகியோா் கஞ்சா விற்பனை செய்ததும், அவா்களுக்கு கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சோ்ந்த கணபதி மகன் சுப்பிரமணி (27) மூலம் கஞ்சா கிடைத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்த தனிப்பிரிவு போலீஸாா், அவா்களிடமிருந்து 6.5 கிலோ கஞ்சா, ரொக்கப்பணம் ரூ.26 ஆயிரம், 2 சுமை ஆட்டோ, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட 4 போ் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 6.5 கிலோ கஞ்சா, 2 சுமை ஆட்டோ வாகனங்கள், ஒரு பைக் ஆகியவற்றை மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.