தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில், டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகம் மற்றும் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான நிறுவனங்களில் இருந்து பங்குத் தொகை பெறுவதாக, தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, தூத்துக்குடி டிஎஸ்பி பீட்டா் பால்துரை தலைமையில், காவல் ஆய்வாளா் சுதா மற்றும் போலீஸாா், வியாழக்கிழமை மாலையில் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியில் செல்ல முடியாத வகையிலும், யாரையும் தொடா்பு கொள்ளாத வகையிலும் கைப்பேசிகளை கைப்பற்றி, கதவுகளை பூட்டி சோதனை மேற்கொண்டனா்.