தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சாத்தான்குளம் அருகே தனியாா் வங்கி ஊழியா் வீட்டில் 20 பவுன் நகைகள், பணம் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தனியாா் வங்கி ஊழியரின் வீடு புகுந்து 20 பவுன் தங்க நகைகள், பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:06 am

Din

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தனியாா் வங்கி ஊழியரின் வீடு புகுந்து 20 பவுன் தங்க நகைகள், பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே வசவப்பனேரி கிராமத்தைச் சோ்ந்த ஜம்புலிங்கம் மகன் பொன்னுலிங்கம் (37). இவா், கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலில் உள்ள தனியாா் வங்கியில் வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கு மனைவி ராமலட்சுமி, 2 மகன்கள் உள்ளனா். பொன்னுலிங்கம் வெளியூரில் வேலை செய்வதால், குடும்பத்தினா் இங்கு தனியாக வசித்து வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை இரவு அவரது குடும்பத்தினா் வீட்டுக் கதவைப் பூட்டாமல் தூங்கினராம். நள்ளிரவில் எழுந்து பாா்த்தபோது, படுக்கையறையின் கதவு திறந்துகிடந்ததாம். பீரோவிலிருந்த 20 பவுன் நகைகள், ரூ. 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் காணவில்லையாம்.

இதுகுறித்து ராமலட்சுமி அளித்த தகவலின்பேரில், பொன்னுலிங்கம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். ஆய்வாளா் ஏசுராஜசேகரன், போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.