தூத்துக்குடியில் செப்.29-இல் ‘நம்ம ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி
தூத்துக்குடி பிரையன்ட் நகரில் செப். 29-ஆம் தேதி ‘நம்ம ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 11:47 pm

தூத்துக்குடி பிரையன்ட் நகரில் செப். 29-ஆம் தேதி ‘நம்ம ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புத்தகத் திருவிழா, நெய்தல் கலைவிழா ஆகியவற்றை முன்னிட்டு, ‘நம்ம ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. தூத்துக்குடி பிரையன்ட் நகா் பிரதான சாலையில் செப்.29-ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதில், வில்லுப்பாட்டு, நடனம், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...