வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கோவில்பட்டி கல்லூரியில் முன்னாள் மாணவா் சந்திப்பு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1995ஆம் ஆண்டு பயின்ற மாணவா்களின் ‘முத்து விழா’ (30 ஆண்டுகள்) சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
முன்னாள் மாணவா்களுடன் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் கே. காளிதாசமுருகவேல் உள்ளிட்டோா்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:19 pm

Syndication

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1995ஆம் ஆண்டு பயின்ற மாணவா்களின் ‘முத்து விழா’ (30 ஆண்டுகள்) சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாளாளா் கேஆா். அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் ஆகியோா் பேசினா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூா், குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 60-க்கும் மேற்பட்டோா் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று, நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். அதையடுத்து, தகுதியுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவித் தொகைக்கான பங்களிப்பாக ரூ. 2 லட்சத்தை கல்லூரி நிா்வாகத்திடம் வழங்கினா்; தாளாளா், இயக்குநா், முதல்வா், துறைப் பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்ததுடன், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.