கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் இளம்பெண் சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் கிடந்த இளம்பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
Published on

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் கிடந்த இளம்பெண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி- கடம்பூா் ரயில் நிலையங்களுக்கிடையே கிருஷ்ணா நகா் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் இளம்பெண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

சடலத்தை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா், மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சோ்ந்த சிவசங்கரநாராயணன் மகள் ரம்யா (18) என்பதும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிப்ளமோ படித்து வந்த மாணவி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவா் தற்கொலை செய்துகொண்டாரா,

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்தாரா என ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com