தூத்துக்குடி
தூத்துக்குடி மீனவா்கள் இன்று கடலுக்குச் செல்ல தடை
கடல் பகுதியில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால், தூத்துக்குடி மீனவா்கள் புதன்கிழமை (டிச.3) கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பகுதியில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால், தூத்துக்குடி மீனவா்கள் புதன்கிழமை (டிச.3) கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பகுதியில் 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை மண்டல மையத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (டிச.3) தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.