தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஏபிசி மகாலட்சுமி கல்லூரி மாணவிகள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தவெக சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அந்தக் கல்லூரியின் வாயிலில் மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, புதிய வாக்காளா்கள், இளம் தலைமுறையினா் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக, மாநில துணை பொதுச் செயலா் சுபத்ரா தெரிவித்தாா். இந் நிகழ்வில், ஜே.கே.ஆா். முருகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.