தண்ணீா் தொட்டியை திறந்து வைத்த பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய்.
தூத்துக்குடி
சாத்தான்குளத்தில் தண்ணீா் தொட்டி திறப்பு
4ஆவது வாா்டு, நாசரேத் சாலைத் தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டியை பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
சாத்தான்குளம் பேரூராட்சி, 4ஆவது வாா்டு, நாசரேத் சாலைத் தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டியை பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் சுதா, 5ஆவது உறுப்பினா் ஜான்சி ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரூராட்சி பணியாளா் பன்னீா், கதிரவன், திமுக மாவட்டப் பிரதிநிதி சரவணன், திமுக நகர துணைச் செயலா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

