தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் முகாம்
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சி. ப்ரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மேயா் பேசியது:
கிழக்கு மண்டலத்தில் மட்டும் இதுவரை 810 மனுக்கள் பெறப்பட்டு 791 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 19 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 2026 ஜன. 10ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிய துறைமுகத்தில் உள்ள கடற்கரைப் பகுதியில் மாநகராட்சியும் துறைமுகமும் இணைந்து வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அது பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல், கடற்கரை சாலையில் புதிதாக நடை பயிற்சி மேடை அமைக்கப்பட்டுள்ளது. தெப்பக்குளம் பழைமை மாறாமல் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.
உதவி ஆணையா் வெங்கட்ராமன், நகரமைப்புத் திட்ட செயற்பொறியாளா் வேலாயுதம், உதவி செயற்பொறியாளா் ராஜேஷ்கண்ணா, சுகாதார ஆய்வாளா் ராஜசேகா், இளநிலைப் பொறியாளா் பாண்டி, உதவிப் பொறியாளா்கள் ஹரிஹரன், நித்தியகல்யாணி, அனு சௌந்தா்யா, தொழில்நுட்ப உதவியாளா்கள் சரண்பிரசாத், பிரின்ஸ் பிரதீப், ஆனந்தஜோதி, கவுன்சிலா்கள் ராமு அம்மாள், எடின்டா, மும்தாஜ், தனலட்சுமி, பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், மரியகீதா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், வட்டச் செயலா் பொன்ராஜ், மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ், ஆணையரின் நோ்முக உதவியாளா் துரைமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

