தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே இளைஞா் கைது: புகையிலை பொருள்கள் பறிமுதல்
கோவில்பட்டி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே வெங்கடாசலபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமலை, சிறப்பு உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா்.
வெங்கடாசலபுரம் விலக்கிலிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் உள்ள கடையின் பின்புறம் கிடந்த சாக்கு மூட்டைகளில் 160 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தன. அதன் அருகே நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் இளையரசனேந்தல், தெற்குத் தெரு இன்னாசிமுத்து மகன் சவுரிராஜ் (34) என்பதும், இப்பொருள்களை விற்பதற்காக பெங்களூரிலிருந்து வாங்கிவந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
