திருச்செந்தூா் சாலைகளில் மக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள்

திருச்செந்தூா் சாலைகளில் மக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள்

திருச்செந்தூா் நகரில் முக்கிய சாலைகளில் மக்கள், பக்தா்களுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.
Published on

திருச்செந்தூா் நகரில் முக்கிய சாலைகளில் மக்கள், பக்தா்களுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெரும்பாலான நாள்கள் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இந்நிலையில் திருச்செந்தூா் நகரின் முக்கிய சாலைகள், ரதவீதிகள், சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம், தூண்டுகை விநாயகா் கோயில் பகுதியில் மக்கள், பக்தா்களுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

இவை அவ்வப்போது தாக்குவதால் மக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனா். எனவே, நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வணிகா்கள், மக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com