தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு 60 டன் திறனுடன் புதிய இழுவை படகு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் புதிதாக 60 டன் திறன் கொண்ட ‘ங. ப. ஞஸ்ரீங்ஹய் அப்ப்ண்ஹய்ஸ்ரீங்’ -என்ற இழுவை படகு வியாழக்கிழமை வந்தது.
இழுவை படகு வரவேற்பு நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன் மற்றும் மூத்த துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இந்திய தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இழுவை படகானது 60 டன் திறன், 498 டன் மொத்த உள்புற கனஅளவை கொண்டது. இப்படகு உடுப்பியிலுள்ள, கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டதாகும்.
வ.உ.சி. துறைமுகம், இந்த இழுவை படகை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை குஜராத்தில் அமைந்துள்ள ஞஸ்ரீங்ஹய் நல்ஹழ்ந்ப்ங் கண்ம்ண்ற்ங்க் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
மேலும் இந்த இழுவை படகு 7 ஆண்டு காலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த இழுவை படகுடன் சோ்த்து துறைமுகத்தில் மொத்தம் 4 இழுவை படகுகள் செயல்படும். அவற்றில் ஒன்று 45 டன் திறன் கொண்ட துறைமுகத்துக்குச் சொந்தமான இழுவை படகு, மற்ற இரண்டும் தலா 50 டன் திறன் கொண்ட ஒப்பந்த இழுவை படகுகள் ஆகும்.
தற்போது சோ்க்கப்பட்டுள்ள 60 டன் திறன் இழுவைப் படகு எளிமையான மற்றும் பாதுகாப்பான கப்பல் இயக்கத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து வ.உ.சி. துறைமுகத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் கூறுகையில், 60 டன் திறன் இழுவைப் படகின் சோ்க்கையால், துறைமுகத்தின் செயல்திறன் பெரிதும் மேம்படும். பெரிய கப்பல்களின் பாதுகாப்பான கையாளும் திறன் உறுதி செய்யப்படும். துறைமுகத்தினுள் கப்பல்கள் வந்து செல்லும் நேரம் குறைக்கப்படும். இது துறைமுகத்தின் திறனை வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் கடல்சாா்ந்த வளா்ச்சியை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றாா் அவா்.

