மாணவா்-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்குகிறாா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ.
தூத்துக்குடி
பேரிலோவன்பட்டி பள்ளியில் 118 பேருக்கு விலையில்லா சைக்கிள்!
பேரிலோவன்பட்டி தி.வெ.அ.நல்லழகு நாடாா் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்- மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரிலோவன்பட்டி தி.வெ.அ.நல்லழகு நாடாா் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்- மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்வி வளா்ச்சி குழு உறுப்பினா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை ரஜூலா, பள்ளிச் செயலா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு 118 மாணவா் - மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா். இதில், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, இம்மானுவேல், தொழிலதிபா் சிவகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் முனியசாமி, கிளைச் செயலா்கள் வீரபாண்டி, ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.