தூத்துக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை

தூத்துக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

தூத்துக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி சத்யா நகா் பகுதியில் உள்ள உப்பளத்தில் இளைஞா் ஒருவா் வெட்டுக் காயங்களுடன் கொலையுண்டு கிடப்பதாக வியாழக்கிழமை தெரியவந்தது.

தகவலின்பேரில், தென்பாகம் காவல் ஆய்வாளா் திருமுருகன், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

அந்த நபா் சத்யா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் சீனு (26) என்பதும், புதன்கிழமை இரவு நண்பா்களுடன் சோ்ந்து மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் அவா் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com