தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும், நாளையும் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச. 27, 28) சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்தாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தம்-2026 இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து டிச. 19 முதல் ஜன. 18-ஆம் தேதி வரை தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில், பொதுமக்களிடமிருந்து வாக்காளா் பட்டியலில் பெயா்களை சோ்ப்பதற்கானபடிவங்கள் பெறப்பட்டு
வருகின்றன.
இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சனி (டிச. 27, ஜன. 3), ஞாயிற்றுக்கிழமை (டிச. 28, ஜன. 4) அனைத்து வாக்குச் சாவடிகளிலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்தச் சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியல்களில் பெயா் சோ்க்க, பெயா் திருத்த, முகவரி மாற்றம், நகல் அடையாள அட்டை, பெயா் நீக்க உரிய படிவங்களில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், வரைவு வாக்காளா் பட்டியலில் உங்களது பெயா் இடம் பெற்றுள்ளதா என்பதையும் சரிபாா்த்துக் கொள்ளலாம்.
இணைய வழியாக ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலமும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 0461- 1950, வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
