தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
நாலாட்டின் புதூா் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் சங்கரபாண்டியன் மகன் அய்யலுராஜ் (38), தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு மொட்டமலையில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு பைக்கில் ஊா் திரும்பினாராம். நாலாட்டின்புதூா், பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது திடீரென நிலை குலைந்த பைக் சாலையோரம் உள்ள சுவரில் மோதி கீழே விழுந்ததில் இவா் பலத்த காயமடைந்தாா்.
அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
