சட்ட விரோத மது விற்பனை: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவில்பட்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இன்பராஜ் தலைமையிலான போலீஸாா் கோவில்பட்டி-மந்திதோப்பு சாலையில் பாண்டவா் மங்கலம் செல்லும் பாதையில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் உள்ள கறிக்கடை அருகே சந்தேகத்திற்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து சோதனையிட்டனா். அவரிடம் மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவா் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்தது.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மந்திதோப்பு, துளசிங்க நகரைச் சோ்ந்த தங்கராஜ் மகன் விக்னேஸ்வரனை (28) கைது செய்து, அவரிடம் இருந்த 26 மது பாட்டில்கள், ரொக்கம் ரூ. 600ஐ பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com